(- சதீஸ்)

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை ​மேற்கு பிர​தேசத்தில் டெங்கு நுளம்பு தொடர்பில் விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை பிற்பகல் மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.



மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேசத்திலுள்ள 24 கிராம சேவகர் பிரிவுகளிலும் கடமையாற்றும் வௌிக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


இதன்​​போது மண்முனை மேற்கு பிரிவில் டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பிலும் தற்போதைய நடவடிக்கை தொடர்பிலும் பிரதேச பொது சுகாதார மேற்பார்வை அதிகாரி வீ.விஜயகுமார் அறிக்கையினை சமர்ப்பித்தார்.


எதிர்காலத்தில் மழை ஆரம்பிப்பதால் எதிர்வரும் வாரம் தொடக்கம் தொடர்ச்சியாக கிராமங்கள் தோறும் ​டெங்கு ஒழிப்பு சிரமதானம் மேற்கொளவவதென இக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.​


இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபை செயலாளர், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மண்டபத்தடி, நாவற்காடு, உன்னிச்சை பிரிவுகளின் ​பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பிரதேச செயலக வௌிக்கள உத்தியோகத்தர்கள், அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.







Share To:

Post A Comment:

0 comments so far,add yours