சுவிஸ் நாட்டில் வாழும் துரைநாயகம் அவர்களது பிள்ளைகளான விஜி,சுஜி ஆகிய சகோதரர்களால் புதுக்குடியிருப்பு மக்களுக்கு 8 குழாய்கிணறுகள் அமைத்து பாவனையாளர்களிடம் கையளித்துள்ளனர் அதே வேளை இதே போன்று இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் குடிநீர் வழங்குவதற்கு பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிகழ்வில் அதிதிகளாக சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள சுவிஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் சுவிஸ் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், உபசெயலாளரும் மகளீர் அமைப்பின் தலைவியுமான திருமதி செல்வி மனோகர் வர்த்தகர் அகிலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.அதேவேளை இவ் உதவிகளை வழங்கிய சுவிஸ் உதயத்தின் செயற்குழுவிற்கும் சுஜி,விஜி ஆகியோருக்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
Post A Comment:
0 comments so far,add yours