சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் நாட்டில் வாழும் சமூகசேவகர் சுவிஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் அவர்களின் சொந்த நிதியின் மூலம் புதுக்குடியிருப்பு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு 26 ஆம் திகதி வியாழக்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின்  கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  அதிதிகளாக சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள சுவிஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், உபசெயலாளரும் மகளீர் அமைப்பின் தலைவியுமான திருமதி செல்வி மனோகர் சுவிஸ் உதயம் அமைப்பின் உறுப்பினர் அகிலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.அதேவேளை இவ் உதவிகளை வழங்கிய சுவிஸ் உதயத்தின் செயற்குழுவிற்கும் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் அவர்களுக்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.























Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours