(காரைதீவு நிருபர்சகா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி
அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு அலங்கார மஹோற்சவம் (20)
வெள்ளிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 9தினங்கள் சடங்குகள் காரைதீவு கணணகைஅம்பாள் ஆலயத்தின் முன்னாள் கப்புகனார் க.பாஸ்கரனின் ஆசீர்வாதத்துடன் ஆலய பிரதமபூசகர் கு.லோகேஸ் தலைமையில் நடைபெறவுள்ளன.
தினமும் கிரியைகள் யாவும் பகல்12மணிக்கும் மாலை 7மணிக்கும் நடைபெற்று 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தீமிதிப்பு வைபவம் நடைபெறுமென ஆலயபரிபாலனசபைத்தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
22ஆம் திகதி பாற்குடபவனியும் 26ஆம் திகதி வீரகம்பம் வெட்டலும் நடைபெற்று
28ஆம் திகதி மதியம் சக்தி பூஜையும் மாலை நோற்புநூல்க்கட்டலும்
இடம்பெறும்.

Post A Comment:
0 comments so far,add yours