(க.விஜயரெத்தினம்)
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் விடுதலையை வலியுறுத்தியும்,காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தர வேண்டியும்,சர்வதேசமானது காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைப்பாட்டில் இலங்கை அரசாங்கமானது பொறுப்புக்கூறும் தன்மையை வலியுறுத்தியும்,மட்டக்களப்பில் சிறுவர் தினத்தில் பாரியதொரு கவனயீர்ப்பு ஆட்பாட்டம் ஒன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை(1)காலை 11.00மணியளவில் இடம்பெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி திருமதி.அமலநாயகி அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 100 மேற்பட்ட சிறுவர்கள்,பெற்றோர்கள், மதத்தலைவர்கள்,சிவில் அமைப்புக்களின் தலைவர்கள்,பிரதிநிதிகள்,வலிந்து காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார் கலந்து கொண்டார்கள்.
இதன்போது காணாமற் ஆக்கப்பட்ட சிறுவர்கள் இன்றைய சிறுவர் தினத்தில் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதோடு,கா ணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிள்ளைகளுக்கும் நீதி வேண்டியும்,சர்வதேச சிறுவர்தினத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுவதோடு கடந்த யுத்தத்தினால் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.அதேபோன்று காணாமல் ஆக்கப்பட்ட தந்தையர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.இதனால் இன்று அவர்களின் பிள்ளைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இவ்வா று பாதிக்கப்பட்ட பிள்ளைகள் இன்று சிறுவர் தினத்தை மன உளைச்சலுடன் கொண்டாடுகின்றார்கள்.தந்தையை தேடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளின் நிலைப்பாட்டை அரசாங்கத்துக்கு எடுத்துக்காட்டுவதற்கும்,காணா மல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனையை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தவும்,சர்வதேசமானது இவ்விடயமாக கவனமெடுத்து இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட தந்தைமாரை மீட்பதற்கும்,பொறுப்புக்கூறலை சுயமாக எடுத்துக்காட்டுவதற்கும் இப்போராட்டம் முன்னெடுப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பின் தலைவி இவ்வாறு தெரிவித்தார்.










Post A Comment:
0 comments so far,add yours