(மண்டூர் நிருபர் தவக்குமார்)
மிக நீண்ட காலங்களாக இருந்து வரும் தமிழ் மக்களின் அரசியல்,பொருளாதாரம்,மீள்குடியேற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு  உறுதியான தீர்க்கமான முடிவுகளை ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச விரைவில் பெற்றுக்கொடுப்பார் என பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சோ.கணேசமூர்த்தி இன்று தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சம்மந்தமாக மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள்,அங்கத்தவர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

ஏனைய மாகாணங்களை போன்று வட கிழக்கு பிரதேசங்களும் சகலவிதமான வசதிகளையும் ஏற்படுத்தி அனைத்தது இன மக்களும் சுதந்திரமாக வாழ ஏற்படுத்திக் கொடுப்பார் என்றும் குறிப்பாக கல்வி, சுகாதாரம்,குடிநீர் ஆகிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பதின்மூன்றாவதுவது சரத்தினை முற்றாக அமுல் நடத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய வகையில் அவர்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பார்

இந்த நாட்டிலே மூவின மக்களையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரே ஒரு கட்சியே ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனைத்து இன மக்களின் ஆதரவோடு 2019ஆம் ஆண்டு ஆட்சியமைக்க உள்ளது என்பது உறுதி எங்களது ஜனாதிபதி வேட்பாளர் அனைத்து மக்களுடனும் அணுகிப்பழகி ஆதரிக்கக்கூடிய ஒருவர் எனத் தெரிவித்தார்.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours