வௌிநாட்டு மதுபானத்தின் சில்லறை விற்பனை, போக்குவரத்து மற்றும் கையிருப்பில் வைத்திருப்பதற்கான அளவை 80 லீட்டராக அதிகரிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதுவரை காலம் வௌிநாட்டு மதுபானத்தின் சில்லறை விற்பனை, போக்குவரத்து மற்றும் கையிருப்பில் வைத்திருப்பதற்கான அளவு 7.5 லீட்டராகக் காணப்பட்டது.

உடன் அமுலாகும் வகையில் இதனை 80 லீட்டராக அதிகரிப்பதற்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, நாளை  (03) நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க கூறினார்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனை ஆகியவற்றில் ஈடுபடுவோர் மற்றும் மதுவரி சட்டத்தை மீறுவோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக 1000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க சுட்டிக்காட்டினார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours