வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் நிச்சயமாக சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்திற்கே வாக்களிப்பார்கள் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச்செய்யும் நோக்கிலான இடதுசாரிகள் ஒத்துழைப்பு மாநாடு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒருபுறம் பாஸிசவாதமும், மறுபுறம் ஜனநாயகமும் போட்டியிடுகின்றன.
அந்தவகையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் நிச்சயமாக சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்திற்கே வாக்களிப்பார்கள்.
அதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.கோத்தபாய ராஜபக்ஷவின் மேடையில் அவருடைய குடும்பம் மாத்திரமே நிற்கின்றது.

Post A Comment:
0 comments so far,add yours