(த.தவக்குமார்)
காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் தொழில் பயிற்சி நிலையத்தில் காணப்படுகின்ற பயிற்சி நெறிகள் தொடர்பாக காரைதீவு பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கின்ற விழிப்புணர்வு நிகழ்வும், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் வழங்கப்படுகின்ற பயிற்சி நெறிகள் தொடர்பான விபரங்களை தெளிவூட்டும் நிகழ்வும் இன்று (11) காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜனாப்.எம்.வி.நளீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் அவர்களினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இந்த வருடம் கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.







Share To:

Post A Comment:

0 comments so far,add yours