எஸ்.குமணன்

கல்முனை அஸ் ஸூஹரா வித்தியாலய மாணவர்களினால் முன்னேடுக்கப்பட்ட சிறுவர் தின நிகழ்வு மற்றும் மாணவர்கள்  விழிப்புணர்வுப் பேரணி பாடசாலை  அதிபர் ஏ.எல்.ஏ  கமால்   தலைமையில்   இடம்பெற்றது .

செவ்வாய்க்கிழமை(1)இடம்பெற்ற   இந் நிகழ்விற்கு  பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாடசாலைகள் பொறியியலாளர் ஏ.ஜெ.ஏ.எச்  ஜெளவ்சி மற்றும் கௌரவ அதிதியாக  கல்முனை வர்த்தக சங்கத்தின் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான  கே.எம் சித்தீக் விஷேட அதிதியாக ஓய்வுபெற்ற ஆரம்பப் பிரிவு மேலதிக பிரதிக் கல்விப் பணிப்பாளர்   அஷ்ஷெய்க் இஸட். எம் நதிர் மெளலவி 
பாடசாலையினுடைய பிரதி அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜீதிய்யா  ,பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான எச்.எம் நிஜாம்  ,
கல்முனை பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உதவியாளர்  என்.எம் நெளஸாத்  ,பாடசாலையினுடைய ஆசிரியர்கள்,  பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் வலுவூட்டப்பட்ட பெற்றோர் அபிவிருத்திக் குழுவினர் பெற்றோர்கள் என பலரும் கலந்து  கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours