(மண்டூர் நிருபர் தவக்குமார்)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி மூன்று தேர்தல் தொகுதிகளான மட்டக்களப்பு,கல்குடா,பட்டிருப்பு ஆகிய தொகுதிகளுக்கு மூன்று முகவர்கள் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ளதாக பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பட்டிருப்பு தொகுதிக்கு அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி அவர்களும் மட்டக்களப்பு தொகுதிக்கு இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலான, கல்குடா தொகுதிக்கு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் அவர்களும் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2019ஆம் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்கும் இவர்களே அங்கிகரிக்கப்பட்ட முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Share To:

Post A Comment:

0 comments so far,add yours