(த.தவக்குமார்)
அலுவலக உத்தியோகத்தர்களின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் முகமாக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் வில்வரெத்தினம் சிவப்பிரியா அவர்களின் வழிகாட்டல் மற்றும் தலைமையின் கீழ் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி பிரிவால் ஒழுங்கு செய்து மாதந்தோறும் நடாத்தப்படவிருக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று 28 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
முதலாம் நிகழ்வாக இடம்பெற்ற உத்தியோகத்தரிடையேயான ' சிறந்த கருத்தாற்றல் கொண்டவை பழைய பாடல்களா ?? அல்லது புதிய பாடல்களா?' எனும் தலைப்பிலான விவாத நிகழ்வானது மிகவும் அருமையானதாகவும் சிறந்த கருத்தாற்றல் கொண்டதாகவும் சுவாரசியமானதாகவும் அனைவரையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இதில் அலுவலக உத்தியோகத்தர்கள் தங்களின் திறமைகளை வெளிக்கொணர்திருந்தனர்.











Post A Comment:
0 comments so far,add yours