(துதி)
சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஏறாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியம் ஏறாவூர் லகூன் பூங்காவில் இன்றைய தினம் சிறுவர்தின நிகழ்வினை சிறப்பாகக் கொண்டாடியது. சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் முகம்மட் பாறூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்கப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அப்துல் அஸீஸ் அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அத்துடன் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் உப தலைவரும், மாவட்ட மனித உரிமைகள் விசாரணை அதிகாரி ஐ.எம்.தஸீர், உறுப்பினர்களான இஸ்ஸடீன், வஸீம், இஸ்ஸத், கம்ஸா உட்பட பலரும் கலந்து கொண்டனர்
இதன் போது சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




Post A Comment:
0 comments so far,add yours