தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் உள்ளிட்ட 14 கட்சிகள் இணைந்து (04) பொது ஜன பெரமுன கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதற்கு 14 கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் பா.சந்திரகுமார் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற பொது ஜன பெரமுன கட்சியுடன் இணைந்த 14 அரசியல் கட்சிகளுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக பணியாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கிழக்கு மாகாணம் சார்பாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours