(சா.நடனசபேசன்)
அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனது பன்முப்படுத்தப்பட்ட நிதியில்  இருந்து பெரியநீலாவணை பொது விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது

2;0 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள இவ் பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பெரியநீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 
நிகழ்வில் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கல்முனை வடக்குப் பிரதேசசெயலாளர் ஜெ.அதிசயராஜ் கல்முனை மாநகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான எஸ்.குபேரன்,சந்திரசேகரம் (ராஜன்),பொன் செல்வநாயகம் சிவலிங்கம்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours