உலகசிறுவர் முதியோர் தினநிகழ்வுக்காகமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் சிறப்புஅதிதியாககலந்துகொண்டார். அத்தோடுகல்குடா கல்வி வலயபணிப்பாளர் தினகரன் ரவி,கோட்டைக்கல்வி அதிகாரி,வாகரை பிரதேசசபையின் செயலாளர் ,வேல்ட் விசன் நிறுவனத்தின் முகாமையாளர் இ.பிரகாஷ்குமார் மற்றும் பிரதேசசெயலகஅதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள்,வாகரைபிரதே சசிறுவர்கள் ,முதியோர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றியபிரதேசசெயலாளர் எஸ்.கரன் உரையாற்றுகையில் அனைத்துசிறார்களும் பெற்றோருக்கு பெருமைசேர்க்கின் றவர்களாகசமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகிற்கும் ஒழுக்கம்,நன்னடத்தை சிறந்த கல்வி யாளர்களாக மிளிரவேண்டும் என இந்த இடத்திலேஅனைத்து சிறார்களும் வருங்கால தலைவர்களாகமிளிர இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் திடசங்கற்பம்கொள்ளவேண்டும் .
மகுடம் எஸ்கோவரண்டினா,சிறுவர் அபிவிருத்திதிணைக்களம் ,சிறுவர் பாதுகாப்பு சபை ,வேல்ட் விசன் லங்கா,கோரளைப்பற்றுவடக்குபிரதே சமும் இணைந்து இவ்வுலகசிறுவர் ,முதியோர் தினத்தினை ஏற்பாடுசெய் திருந்தனர்.இவ்வேளைஅரும்புமலர் வெளியீடும் சிறுவர் உரிமை மேம்பாட்டுஉத்தியோகத்தர் அ.அழகுராஜினால் வெளியீடுசெய்யப்பட்டது இப்பிரதிகள் “அரும்பு 12” நூல் சிறப்புபிரதியினைஅரசாங்கஅதிபர் வெளியீட்டுவைத்தார்.
இவ்வைபவத்தில் சிறார்கள் மத்தியில் ஏற்படுத்திவைக்கப்பட்டகட்டுரை, கவிதை,பேச்சு,நடனம் ,குழு நாட்டியம் ஆகியபோட்டியில் வெற்றி பெற்றமாணவர்களுக்கு பரிசி ல்களும் ,சான்றுதல்களும் வழங்கிகௌரவிக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours