(த.தவக்குமார்)
காரைதீவு சமுர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் தினத்தை முன்னிட்டு
சமுர்த்தி வங்கி பயனாளிகளான சிறுவர்கள் மட்டும் முதியோர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும்இ சிறுவர்கள் மற்றும் முதியோர்களின் உரிமைகள் தொடர்பான தெளிவூட்டும் நிகழ்வும் காரைதீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.எஸ்.சதீஷ் அவர்களின் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஜனாப் எம்.எம்.அச்சு முஹம்மட் அவர்களும் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாப். ஏ. எல்.ஏ ஹமீட் அவர்களும் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இதன்போது சமுர்த்தி பயனாளிகளான சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவுகளும்இ சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
அத்துடன் சிறந்த முறையில் சேவையாற்றிய பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பிரதம அதிதியால் பாராட்டி கெளரவிக்கப்பாட்டார்கள்.





Post A Comment:
0 comments so far,add yours