(எஸ்.குமணன்)
மனித உரிமை டிப்ளோமா  கற்கை நெறிக்கான பயிற்சி கருத்தரங்கு வடக்கு உப தமிழ் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில்  அகம் நிறுவனத்தின்  நிகழ்ச்சி திட்ட முகாமையாளர்   க. லகுகராஜா தலைமையில் சனிக்கிழமை (5) காலை 10 மணியளவில் இடம்பெற்றத்து.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினூடாகவும்  கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அணுசரனையுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கான  மனித உரிமைகள் டிப்ளோமா கற்கைநெறிகள் வழங்கப்பட்டன.

இதன்போது 13ம்,19ம் திருத்தச் சட்டம் தொடர்பான விளக்கங்கள் தொடர்பாக வளவாளராக   கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமாகிய   ஹக்கீம் அபூபக்கரினால்  தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இப்பயிற்சி நெறியில் ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours