(த.தவக்குமார்)
கல்வி அமைச்சில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான அதிபர் ஆசிரியர்களை கௌரவிற்கும் குருபிரதீபர் விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வரயதிதிற்குட்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி சித்திவினாயகர் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி தர்மசீலன்-நவகீதா அவர்கள் கௌரவ கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவர் பாடசாலையின் அபிவிருத்திகளையும், எதிர்கால சவால்களை வெற்றி கொண்டு சாதனை படைக்கும் மாணவர் சமூகத்தை உருவாக்குவதற்காக தனது பணிக்குழுகத்தின் உதவியுடனும் சமூத்தின் ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்பாக சேவையினை செய்து வருவதனாலேயே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சமூகப்பணி, சமயப்பணி, கல்விப்பணி ஆகிய பணிகளுக்கு தன்னை அற்பணித்து நிற்கும் அதிபர்  திருமதி தர்மசீலன்-நவகீதா அவர்கள் தொழிற்கடமை, சழூகக்கடமை, குடும்பக்கடமைகளில் வெற்றி பெற்ற ஒருவராகவே மிளிர்கின்றார்.

இவர் இவ்வருதினை பெறுவது மூன்றாவது தடைவ என்பதும் குறிப்பிடதக்கது.


Share To:

Post A Comment:

0 comments so far,add yours