மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று 23 சனிக்கிழமை சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன்,மண்முனை தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம்  உட்பட பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் கடந்த 2010இம் ஆண்டுதொடக்கம் தொடர்ச்சியாக முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விளக்கேற்றி அஞ்சலி செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours