ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுக்கு ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணி நிலையத்தின் இலங்கைத்தலைவர் செல்லத்துரை வாழ்த்து செய்தி
புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும்; மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸவுக்கும் வாழ்த்து செய்தி ஒன்றை ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணி நிலையத்தின் இலங்கை கிளைத்தலைவர் மாரிமுத்து செல்லத்துரை அனுப்பிவைத்தார்.
அவரது வாழ்த்து செய்தியில் தங்களால் தமது நாட்டில் நல்லாட்சி நிலைத்திருக்கவும் ஜனாதிபதி ,பிரதமர்,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கும் நீண்ட ஆயுள் வேண்டியும் பிராத்திப்பதாக குறிப்பிட்டார்.
இது தவிர தங்களது நல்லாட்சியில் இந்நாட்டு மக்களுக்கு சிறந்த ஆட்சி கிடைக்கவும் இனங்களுக்கிடையே நல்லுறவு நல்லிணக்கம் மலரவும் சிறுபான்மை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி மலரவும் வேண்டி பிராத்திப்பதாகவும் இந்த வாழ்த்து செய்தியில் அறப்பணி நிலையத்தின் இலங்கை கிளைத்தலைவர் மாரிமுத்து செல்லத்துரை குறிப்பிட்டுள்ளார்.
ஏதிர்வரும் ஜனவரி மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள பகவான் ஸ்ரீ ரமண மகரிசியின் ஜயந்தி தின விசேட விழாவில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்;கும் நல்;லாசி வேண்டியும் அவர்களுக்கு நல்லாரோக்கியம் வேண்டியும் நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டுமெனவும் விசேட பிராத்தனை வழிபாடுகளை நடாத்த இருப்பதாக அறப்பணி நிலையத்தலைவர் செல்லத்துரை இந்த வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
  
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours