காரைதீவு  நிருபர் சகா

கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வருடாந்த ஒளிவிழா நேற்று வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

பிரதம அதிதியாக மட்டு.மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி கிறேஸ் நவரெட்ணராஜா மற்றும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டர்க்டர் கே.பிரசாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. நத்தார்பாப்பாவின் வருகையுடன் நிகழ்ச்சி களைகட்டியது. சிறுவர்கள் குதூகலமாக ஒளிவிழாவைக்கொண்டாடினர்.

வைத்தியசாலையின்பிரதம முகாமைத்துவ உதவியாளர்எஸ்.தேவஅருள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours