களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வன்னியார் வீதி,களுதாவளையில் வசித்து வரும் சிவராசா-துர்சிகா(30) என்பவர் தனக்குத்தானே களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

குறித்த யுவதி தனது தாய்,தந்தையர் தங்களது வீட்டுத்தோட்ட வளவிற்கு சென்ற பின்னர் தனது வீட்டில் தனக்குத் தானே களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவர் கணக்காய்வு திணைக்களத்தில் பொது பரிசோதகராக கடமையாற்றி வருபவர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் அவர்கள் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டார். மட்டக்களப்பு போதனா வைத்தியவாலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் இன்று 09.04.202 (வியாழக்கிழமை) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சம்பவம் பற்றிய விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







Share To:

Post A Comment:

0 comments so far,add yours