(வி.ரி.சகாதேவராஜா)
முதல் விழா காரைதீவு பிரதானவீதி விபுலாநந்த சதுக்கத்திலுள்ள சுவாமி விபுலாநந்த அடிகளாரின் திருவுருவச்சிலை முன்றலில் காரைதீவு பிரதேசசபை நடாத்துகின்ற 'வியத்தகு வித்தகர்' சுவாமி விபுலாநந்தர் பெருவிழா தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெறற்றது.
இந்நிகழ்விற்கு பிரதமஅதிதியாக வீதிஅபிவிருத்திஅதிகாரசபையின் கிழக்குமாகாண பணிப்பாளர் பட்டயப்பொறியியலாளர் திருமதி கலைவாணி வன்னியசிங்கம்(காரைதீவின் முதல் பெண் பொறியியலாளர்) கலந்து சிறப்பித்தார்.
கௌரவஅதிதிகளாக அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்க்பபட்டு புஸ்பாஞ்சில செலுத்திபஞ்சாராத்தி காட்டி வெள்ளைநிற மல்லிகையோ பாடி விசேட பிரார்த்தனை இடம்பெற்றது.
தொடர்ந்து பிரதமஅதிதிக்கு பெருவரவேற்பளிக்கப்பட்டு சுவாமி தொடர்பான நினைவுரைகள் சிறப்புச்சொற்பொழிவுகள் நடைபெற்றன.





Post A Comment:
0 comments so far,add yours