க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு செங்கலடி புலையாவெளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏப்ரல்21 குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு முற்போக்குத்தமிழர் அமைப்பபின் ஏற்பாட்டியில் குறித்த அஞ்சலி நிகழ்வு புதன்கிழமை(21)மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உரையாற்றுகையில்...
கடந்த கால அரசாங்கத்திலே இந்த குண்டுவெடிப்பு நடப்பது தொடர்பாக ஏற்கனவே சொல்லப்பட்டது.சில அரசியல் வாதிகளுக்கு குண்டுத்தாக்குதல் தொடர்பாக தகவல் தெரிந்திருந்தது.சில அரசியல்வாதிகளின் பாதுகாவலர்களுக்கும் தெரிந்திருந்தது.அவர்கள் அதனை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள். கடந்த அரசாங்கத்தை நடாத்திய தற்போதைய எதிர்க்கட்சியினர்.
சஹரான் என்பவர் திடீர் என உறுவாகியவர் அல்ல.நீண்டகால திட்டமிடலுடன் தனியான கொள்கையுடன் செயற்பட்டவர்கள்.அதிலும் தமிழ் யுவதிகளை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றி அல்லது இனச்சுத்திகரிப்பு செய்து அவர்கள்மூலம் மதத்தலங்களில் தாக்குதல் மேற்கொள்ளுவது மிக மோசமான திட்டமிடலாகும்.அப்பாவி புலஸ்தினியும் வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டு ஐ.எஸ்.எஸ் தாக்குதல் மேற்கொள்ள பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதனை தமிழ் யுவதிகள் அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படவேண்டும்.
ஒருசில மதத் தலைவர்களும்,ஒரு சில அரசியல் தலைவர்களுடைய உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள் நாட்டை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளக்கூடும்.அவ்வாறான பேச்சுக்களை பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.ஒரு இனத்திற்கு எதிராக,ஒரு மதத்திற்கு எதிராக,சமூகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டக்கூடிய பேச்சுக்கள் நடவடிக்கைகள்தான் ஐ.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் அடிப்படை நோக்கமே ஆகும்.மதப்பயங்கரவாத தாக்குதலில் மூலம் ஒரு இஸ்லாமிய அரசை உறுவாக்குவதுதான் ஐ.எஸ்.எஸ்.பயங்கரவாதிகளின் குறிக்கோளாகும்.மூவின மக்கள் வாழும் இந்நாட்டிலே ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்க முடியாது.
1990களிலே காத்தான்குடியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்திலே குண்டு தாக்கப்பட்ட பள்ளிவாசல் இன்னமும் புனரமைக்கப்படாமல் உள்ளது. அந்த இடத்திற்கு செல்லுகின்ற சிறுவர்கள்,இளைஞர்கள் அவற்றைப்பார்க்கும் போது இன்னமும் உணர்வு தூண்டப்பட்டு அவர்களை வண்முறையாளர்களாகத்தான் மாறுவார்கள்.இதனைப் பார்வையிடுவோர் இன்னமும் சஹரான்கள் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.இதனால் அப்பாவிகள் மாட்டிக்கொள்கிறார்கள். அப்பாவிக் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.சில மதத்தலைவர்களுடைய பேச்சுக்கள் ஒரு இனத்தை உணர்ச்சியூட்டி இன்னொரு இனத்திற்கு எதிராக தற்கொலை குண்டுதாரியாக மாறுமளவிற்கு கொண்டு சென்றிருக்கின்றது.
பாராளுமன்றத்தில் சில அரசியல் தலைவர்கள் பேசிய பேச்சுக்களும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. வட கிழக்கு இணைத்தால் இரத்த ஆறு ஓடும்.இது ஒரு தனி தாயகம் என்றெல்லாம் பேச்சினார்கள். இவ்வாறான பேச்சுதான் வளர்ந்துவரும் சமூதாயத்திற்கு ஒரு உணர்வை ஊட்டி அது இன்னுமொரு சமூகத்திற்கு எதிராக மாறுகிறது.
மீண்டும் இவ்வாறன ஒரு துன்பியல் சம்பவம் அவல நிலமை எம்நாட்டில் ஏற்படக்கூடாது.இந்த அரசாங்கம் இது தொடர்பில் அதி தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி,நியாயம் நிலை நாட்டப்பட வேண்டும்.





Post A Comment:
0 comments so far,add yours