பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவரையும் நினைவுகூர்ந்து முற்பகல் 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய கௌரவ பிரதமர், அதனை தொடர்ந்து தீபமேற்றி அவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்தார். குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ பிரதமருடன் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொண்டார்.
இத்தால் ஈராண்டுகளுக்கு முன்னர் இன்று போன்றதொரு தினத்தில் தீவிரவாத குழுவொன்றினால் நிகழ்த்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் 270 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.



Post A Comment:
0 comments so far,add yours