(க.விஜயரெத்தினம்)
மண்முனை பிரதேச சபையினால் "சுற்றுச்சூழலை சுத்தமாக வைப்போம்" எனும் தொனிப்பொருளில் சிரமதானம் இடம்பெற்றது.அதிமேதகு ஜனாதிபதியின் "நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக மண்முனை பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் "சுற்றுச்சூழலை சுத்தம் செய்து அழகாக வைத்திருப்போம்" எனும் மாபெரும் சிரமதானம் கிரான்குளத்தில் சனிக்கிழமை (3)நடைபெற்றது.
பொதுமக்களினாலும், கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதிகளில் பயணிப்போரும்,வாகனங்களில் பயணிப்போரும் கழிவுகளை வீசிவிட்டு செல்கின்றார்கள்.குறிப்பாக உக்க முடியாத கழிவுகள்,வீட்டுக்கழிவுகள்,கண்
இதனை முன்னாள் தவிசாளர் தலைமையிலான நிருவாகம் கவனத்தில் எடுக்கவில்லை.இதனை புதிய தவிசாளர் தலைமையிலான நிருவாகம் கவனமெடுத்து பிரதேச சபையின் கனரக வாகனங்களையும்,ஊழியர்களையும் பயன்படுத்தி சிரமதானத்தை செய்தார்கள்.பிரதான வீதியோரத்தில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதற்கான இடங்கள் ,வீதியோரக்கழிவுகள் கனரக வாகனத்தினால் துப்பரவு செய்யப்பட்டது.இச்சிரமானத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.




Post A Comment:
0 comments so far,add yours