(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
திருக்கோவில் பிரதேசத்தில் தினக்கூலி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் தினக்கூலி வறுமானத்தை இழந்த குடும்பங்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் மனிதாபிமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இவ் உலர் உணவுப் பொதிகள் திருக்கோவில் பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கு இனங்க பொது அமைப்புக்கள் மற்றும் தனியாரின் நிதி பங்களிப்புடன் திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ந்தும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் திருக்கோவில் பிரதேசத்தில் மீள் குடியேற்ற கிராமங்களான தாண்டியடி தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மிக வறிய தினக்கூலி குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு இருந்தன.
இவ் உலர் உணவுப் பொதிகளை அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கொவிட் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வீடு வீடாச் சென்று வழங்கி வைத்திருந்தனர்.



Post A Comment:
0 comments so far,add yours