மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 220 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் மரணமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இதன்போது தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 220 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.
இவர்களில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 62 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 35 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 28 பேரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலிருந்து 24பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 22 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours