(மண்டூர் ஷமி)


காத்தாங்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட இசைநடனக்கல்லூரி வீதி,நெச்சிமுனைளைச் சேர்ந்த ஜம்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி வயது (48) என்பவர் குளவி கொட்டுக்கு இலக்காகி சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை (14) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது தனது வீட்டின் பின்புறமாக மலசல கூடத்திற்கு சிறுநீர் கழிக்கச்செல்லும் போது குறித்த இடத்தில் கூட்;டமாக இருந்த குளவிகள் தாக்கிய நிpலையில் குறித்த நபர் மயக்கமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக விசாரணைகிள்ன போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன்  சம்ப இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours