எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் (எஸ்டா ) ஆலோசகர் தேசகீர்த்தி கீர்த்தி ஸ்ரீ ச .பேரின்பநாயகம் (JP) அவர்களின் சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது

இந்நிகழ்வு அவரது தனது 80 வது பிறந்தநாளை ஒன்றிய உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் தனது குடும்பத்தினருடன் கொண்டாடியபோது இக் கௌரவிப்பு இடம்பெற்றது

.1942.07.26 அன்று சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் மகனாக பிறந்த இவர் தனது ஆரம்ப கல்வியை மட் /எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்திலும் உயர் தர கல்வியை மட் /பட் / பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திலும் பயின்றார் .1968/03/07 இல் சுகாதார திணைக்களத்தில் அனுதரிசினியாளர்  ஆக அரச பணியில் இணைந்தார் .உயர்தரக் கல்வியினை முடித்த காலம் தொடக்கம் சமூக சேவையில் அக்கறை கொண்ட இவர் 1963 எருவில் கிராமத்தில் சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் செயலாளராக பதவியேற்ற காலம் தொடக்கம் இன்று வரை எருவில் கிராமத்திலுள்ள பொது அமைப்புகளிலும் பிரதேச மாவட்ட மட்ட அமைப்புகளிலும் இணைந்து மக்களுக்காக பணி புரிந்து வரும் பெருமைக்குரியவர் .எருவில் கிராம அபிவிருத்தி சங்க தலைவராகவும் எருவில் கிராமோதய சபை தலைவராகவும் எருவில் கண்ணகி மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராகவும் பழைய மாணவர் சங்க செயலாளராகவும் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினராகவும் பழைய மாணவர் சங்க உறுப்பினராகவும் களுதாவளை திருஞான சம்பந்தர் குருகுலத்தில் நிருவாக சபை உறுப்பினராகவும் ம .தெ .எ .பற்று பிரதேச செயலக கலாசார பேரவை உறுப்பினராகவும் திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் செயற்பட்டு பணி புரிந்தார் .சமூக சேவையில் வைர விழாவை தாண்டியும் தற்போதும் பல்வேறு அமைப்புகள் ஊடாக சேவைபுரிந்து வருகின்றார் .அந்த வகையில் எஸ்டா அமைப்பின் ஆலோசகராகவும் களுவாஞ்சிகுடி பிரதேச கமநல அமைப்பின் தலைவராகவும் எருவில் கமநல அமைப்பின் தலைவராகவும் எருவில் அம்பலத்தடி பிள்ளையார் ஆலய பரிபாலன சபைத் தலைவராகவும் எருவில் பெத்தாங்குடி ஒன்றிய தலைவராகவும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நலன்புரிச்சங்க செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .இவரது சேவைகளை பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் .2002 இல் ஜன சேவா விருதும் 2005 இல் தேசகீர்த்தி விருதும் 2008 இல் கீர்த்தி ஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2011 இல் ம .தெ .எ பற்று பிரதேச செயலக கலாசார பேரவையால் சமூக சமய சேவைக்காக கௌரவிக்கப்பட்டார் .2011 சமூக சேவை திணைக்களத்தினால் சிறந்த சிரேஸ்ட பிரஜையாக கெளரவம். 2013 மட்டகளப்பு மாவட்டத்தின் சிறந்த சிரேஸ்ட பிரஜைக்கான கௌரவத்தினை பெற்றார் .2013 ம .தெ .எ பற்று பிரதேச செயலக கலாசார பேரவையால் சிறந்த சமூக சேவையாளர் விருது வழங்கி கௌரவிக்கபட்டார் .இவற்றை விட எருவில் கிராமத்திலுள்ள பல்வேறு அமைப்புகளாலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். 
எண்பது வயதிலும் துடிப்பு மிக்க சமூக செயற்பாட்டாளராக விளங்கும் திரு ச .பேரின்பநாயகம் ஐயா வாழ்க வாழ்க வாழ்க என எஸ்டா வாழ்த்துகின்றது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours