------- 
(எம்.என்.எம்.அப்ராஸ்)

கீலின் ஸ்ரீ லங்கா திட்டத்துக்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வழிகாட்டுதலின்படி, கல்முனை பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் வகையில் பொது மக்களுக்கு விழி்ப்புணர்வை மேற்கொள்ள கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (24) இடம்பெற்றது. 

இதன் போது கல்முனை கீறின் பீல்ட் பகுதியில் தற்போது காணப்படும் பொது மக்களின் சுகாதார நிலை தொடர்பில் மற்றும் திண்மக் கழிவு சேகரிப்பு முறையான முகாமைத்துவ வழிகாட்டலில் மூலம் சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் எதிர்வரும் வாரமளவில் சுகாதார துறையினர்,அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து கல்முனை கீரின் பீல்ட் பகுதியில் சிரமாதன பணி இடம்பெற தீர்மானிக்கப்பட்டது.

மேற்குறித்த கலந்துரையாடலில் கல்முனை தெற்கு மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.ரிஸ்பின் கல்முனை பொலிஸார் கல்முனை பிரதேச செயலக அதிகாரி,கல்முனை கீறின் பீல்ட் பள்ளிவாசல் நிருவாகிகள்,கிரீன்ஃபீல்ட் கொண்டோமினியம் நிருவாகிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours