(சுமன்)
குறித்த கருத்தரங்கில் உதவிப் பிரதேச செயலாளர், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள், சுற்றாடல் பிரிவு உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் பிரிவு சிரேஸ்ட விரிவுரையாளர் கிருபா ராஜரெட்ணம் அவர்களினால் குறித்த எல்-நினோ காலநிலை தொடர்பான விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.
இதன்போது எல்-நினோ நிலைமை ஏற்படும் விதம், அதன் நிலைப்பாடு, அதனால் ஏற்படும் பாதிப்புகள், எதிர்காலத்தில் எதிர்நோக்கப்படுகின்ற விளைவுகள், மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டிய தெளிவு நிலைகள், இதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்ததான தெளிவூட்டல்கள் குறித்த கருத்தரங்கின் மூலம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Post A Comment:
0 comments so far,add yours