வடமாகாண சபையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அங்கே பிரசன்னமாகியிருந்த அரச உயரதிகாரிகள் சிலர் "அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் படமெடுக்கத்தான் சரி  எனவும் ஆசிரியர் போட்டிப்பரீட்சையானது இலகுவாக பரீட்சைத் திணைக்களத்தால் வைக்கப்பட்டது இவர்களை உள்வாங்கத்தான்" என மேலும் பலவாறாக இழிவு படுத்திள்ளனர்.இவ்விடயங்கள் சம்பந்தமான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


பொது நிருவாக சுற்றறிக்கை இலக்கம். 30/88 படி அரச உத்தியோகத்தர்களின் பொதுவான நடத்தை விதிகள் மற்றும் ஒழுக்கக் கோவை தொடர்பானது மற்றும் 13/2019 ன் படி அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் உத்தியோக பூர்வமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல் கட்டுப்படுத்தல் மற்றும் சமூக ஊடகங்களில் பயன்படுத்துவது தொடர்பாக தெளிவாக கூறப்பட்டுள்ளன.அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான அரசசேவைக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டமை கண்டிக்கத்தக்க விடயமாகும். மக்களுக்கான சிறந்த சேவையை வழங்குவது அரச அதிகாரிகளின் கடமையையாகும்.


இவ் இழிவான பேச்சுக்கள் தொடர்பாக பட்டதாரிகள் சங்கம் , ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகர் சங்கம் என்பன பல்வேறு  கண்டனங்களை தெருவித்து வருகின்றனர்.






Share To:

Post A Comment:

0 comments so far,add yours