கூட்டம் ஆரம்பத்தில் இரு நிமிட மௌன இறைவணக்கத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி (02.09.2026) திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாகக் காலமான பழுகாமம் வட்டார உறுப்பினரான மறைந்த சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் அவர்களுக்குச் சபா மண்டபத்தில் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
மறைந்த உறுப்பினரின் நினைவாக முதலாவது அஞ்சலியுரையைத் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து, உபதவிசாளர் தங்கராசா கயசீலன் மற்றும் சபை உறுப்பினர்கள் அனைவரும் மறைந்த உறுப்பினரின் சேவைகளை நினைவு கூர்ந்து அஞ்சலையுரைகளை ஆற்றியிருந்தனர்.
நினைவஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து, போரதீவுப்பற்று பிரதேச சபையின் 16ஆவது சபை அமர்வின் ஏனைய நடவடிக்கை முறைகள் அனைத்தும் சுமுகமான முறையில் நடைபெற்று நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.
(எஸ்.ரஞ்சன்)












Post A Comment:
0 comments so far,add yours