செயற்கை நுண்ணறிவு (AI) தவறான நபர்களின் கைகளில் சென்றால், மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை உருவாக்கும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக மாறியுள்ளதாக Microsoft இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
AI மூலம் 100 கோடி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் சாத்தியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயல்படுபவர்கள் அதிநவீன AI கருவிகளை பயன்படுத்துவது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதனால் சைபர் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பெரிய அளவிலான ஆபத்துகள் உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.
AI நிறுவனங்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்வது மட்டும் போதாது என்றும், அரச சட்டங்கள், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் பில் கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours