சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜன் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இன்று (23.09.2026) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் அன்ரனி வி பிர்நோட் ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாராளுமன்றக் குழுத் தலைவர் என்ற வகையில் நான் மற்றும் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்புகளில் கலந்துகொண்டோம்.
அனோஜனின் விடுதலைக்காக மேற்கொள்ள வேண்டிய இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினோம்.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசரத் தேவையை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளு
டன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினோம்.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், அவரின் விடுதலைக்கான சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கவும் தமது நடவடிக்கைகள் தொடர்கின்றன.
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.


Post A Comment:
0 comments so far,add yours