மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு 60 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சட்டவிரோத சுருக்குவலை வைத்திருந்த ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்புக்கு மீனவர்கள் வழங்கிய இரகசிய தகவல் ஒன்றை அமைப்பினர் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு வழங்கியதையடுத்து சம்பவ தினமான நேற்று மாலை செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டனர்.
இதன் போது குறித்த வீட்டில் இருந்து சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சட்டவிரோத சுருக்கு வலையை வைத்திருந்த அதன் உரிமையாளரான மீனவர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து சுருக்கு வலைகளை கைப்பற்றிய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக சட்டவிரோத சுருக்கு வலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இவரை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Post A Comment:
0 comments so far,add yours