இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், வாசகர்கள், வாசகர் வட்ட நிர்வாகத்தினர் மற்றும் நூலக உதவியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அவர்கள் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டதுடன், பல்வேறு வகையான நூல்கள் தொடர்பான தகவல்களையும் அறிந்துகொண்டனர்.
மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், நூல்களின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், அறிவுத் தேடலை விரிவுபடுத்துதல் மற்றும் நூலகச் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
மேலும், நூலக அங்கத்தவர் சேர்ப்பு மற்றும் மீளிணைப்பு நடவடிக்கைகள் ஊடாகப் பொதுமக்களையும் மாணவர்களையும் நூலகச் சேவைகளுடன் இணைத்து, வாசிப்பின் மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
வாசிப்போம்! அறிவைப் பெருக்குவோம்! அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவோம்!
(எஸ்.ரஞ்சன்)





Post A Comment:
0 comments so far,add yours