ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலைகளில் நடக்கும் நிகழ்வுகளில் உணவுகளையோ அல்லது பரிசுப் பொருட்களையோ கொடுக்கவோ வாங்கவோ கூடாது என்று கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாடசாலைகளில் தேவையில்லாத பணச் செலவுகளையும் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் உருவாவதையும் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தினத்தை எளிமையான முறையில் மட்டுமே நிகழ்த்த வேண்டும்.
*ஆசிரியர் தின விழாவின் போது மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களின் தன்னிகரற்ற மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவையை அங்கீகரித்து கௌரவிக்க வேண்டும். இதன் போது ஆசிரியர்களுக்கு பூமாலை அணிவித்தல் மற்றும் பூச்செண்டு வழங்கி நன்றி செலுத்தும் எளிமையாக விழாவாகக் கொண்டாடலாம்.
அதேவேளை மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து பலவந்தமாக பண அறவீடு செய்து ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்குவதையே கல்வி அமைச்சு 2015 ஆம் ஆண்டிலிருந்து தடை செய்து வருகிறது.
ஆனால் வருடாந்த அமுலாக்கத் திட்டத்தின் கீழ் ஆசிரியர் தின நிகழ்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, வலயக் கல்விப் பணிப்பாளர்/ மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அனுமதி பெற்று இருப்பின், ஆசிரியர் தின நிகழ்வுகளின் போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஆசிரியர்கள், இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் மாகாண மற்றும் தேசிய மட்ட சாதனைக்கு பின்னணியில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் சாதனைக்கு காரணமாக அமைந்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிப்பதோடு மத்தி உணவையும் வழங்கலாம்.
வருடாந்த அமுலாக்கத்திட்டத்தில் இதற்கான நிதி மூலங்களாக பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் மூலம் பெற்றுக் கொள்ள வழிவகை செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Post A Comment:
0 comments so far,add yours