போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு சொந்தமான திருப்பழுகாமம் லேக் சில்ரன் பார்க் பகுதியில் உள்ள சிறுவர் விளையாட்டு முற்றத்தில் சிறுவர்கள் இரவு வேளைகளில் பாதுகாப்பாக விளையாடுவதற்கு ஏதுவாக, தன்னிச்சையாக இயங்கக்கூடிய 'சென்சர்' (Sensor) வசதியுடன் கூடிய புதிய தெருவிளக்கு நேற்று (05.10.2026)ஆம் திகதி பொருத்தப்பட்டது.
சிறுவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திரு. விமலநாதன் மதிமேனன் அவர்களின் விசேட வேண்டுகோளுக்கு அமைவாக, மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் அவசரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பாடத்தக்கது.





Post A Comment:
0 comments so far,add yours