08.10.2026

 இலங்கைக்கு அருகே மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது சற்று வலுவடைந்து காணப்படுகின்றது. 

இதன் காரணத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு சில நாட்களுக்கு இடையிடையே மழை காணப்படும். இது சில நாட்களுக்கு தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து மாலைதீவு மற்றும் லட்சதீவுக்கு இடைப்பட்ட பிராந்தியத்திற்கு செல்லும் போது,

மேலும் ஒரு காற்று சுழற்சியானது எதிர்வரும் 14ஆம்  திகதியளவில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகி தமிழ்நாடு ஊடாக அரபிய கடல் பிராந்தியத்திற்கு செல்ல இருக்கின்றது. 

இதன் காரணத்தினால் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் சில நாட்களுக்கு (14, 15, 16, 17ஆம் திகதிகளில்) கிழக்கு மாகாணங்களில் மழையானது இடையே சற்று அதிகரித்து காணப்படுவதுடன்,   

வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் பெரும்பாலும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் சற்று அதிகமான மழையானது தொடர்ச்சியாக சில நாட்களுக்கு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேபோன்று மேலும் ஒரு நிகழ்வானது எதிர்வரும் 18ஆம் திகதி அளவில் உருவாகும் சாத்தியம் காணப்படுகின்றது.


க.சூரியகுமாரன், 

 சிரேஷ்ட வானிலை அதிகாரி.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours