தென்கிழக்கு (Southeast) மற்றும் கிழக்கு-மத்திய (Eastcentral) வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக நேற்றைய தினம் (22.10.2026) காணப்பட்ட மேலடுக்கு காற்று சுழற்சியின் (Upper-air Cyclonic Circulation) தாக்கத்தினால் கிழக்கு-மத்திய மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இன்று (23.10.2026) ஒரு தாழமுக்க பகுதி (Low Pressure area) உருவாகி உள்ளது.


இது அதே பிராந்தியத்தில் தொடர்ந்து நீடித்து, நாளைய தினம் (24.10.2026) ஒரு தாழமுக்கமாக *(Depression)* தீவிரமடையும்.


அதன்பின்னர் இந்த தாழமுக்கமானது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 25ஆம் திகதி ஆழ்ந்த தாழமுக்கமாக *(Deep Depression)* மேலும் வலுவடையும்.


அதன்பின்னர் இந்த ஆழ்ந்த தாழமுக்கமானது மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல்  பிராந்தியத்திற்கு மேலாக எதிர்வரும் 26ஆம் திகதி காலை ஒரு சூறாவளியாக *(Cyclonic Storm)* மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


*இந்த ஆழ்ந்த தாழமுக்கமானது சூறாவளியாக வலுவடையும் பொழுது இதற்கு இந்திய நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட "முரசு" (Murasu) எனம் பெயர் இதற்கு RSMC-New Delhi (Regional Specialized Meteorological Centre) இனால் வழங்கப்படும்.


பின்னர் இந்த சூறாவளியானது தொடர்ந்து வலுவடைந்து, அதனை அடுத்து வரும் 02 நாட்களில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திர பிரதேசம் (North Andhra Presesh) மற்றும் அததனை சூழவுள்ள தெற்கு ஒடிசா (South Odisha) மாநிலத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


க.சூரியகுமாரன், 

ஓய்வு பெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours