(எஸ்.ரஞ்சன்)
“ஒரு துளி இரத்தம் – ஒரு உயிரின் நம்பிக்கை” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட ,மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தின் திருப்பழுகாமத்தில், சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நேற்று (25.10.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று 9 மணிக்கு ஆரம்பமான இம்முகாம், “ஒரு துளி இரத்தம் – ஒரு உயிரின் நம்பிக்கை” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாமில், "சூட்டிங் ஸ்டார்" விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியைச் சேர்ந்த வைத்தியர் ஆர். சஞ்ஜிதா தலைமையிலான வைத்தியசாலைக் குழுவினர் இரத்ததான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
குறிப்பாக, திருப்பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக்கழகமானது ஒவ்வொரு வருடமும் இவ்வாறான இரத்ததான முகாம்களைத் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இளைஞர்களையும் பொதுமக்களையும் ஒன்றிணைத்து, சமூக நலனையும் மனிதநேயத்தையும் முன்னிறுத்தும் இத்தகைய செயற்பாடுகள் பாராட்டத்தக்கவையாகும்.









Post A Comment:
0 comments so far,add yours