(சிரேஷ்ட ஊடகவியலாளர் சகாதேவராஜா)

காரைதீவில்இன்று  (31)சனிக்கிழமை பலலட்சக்கணக்கான பாரைக்குட்டி மீன்கள் பிடிபட்டன.

காரைதீவுக் கடற்கரைதீர்த்தக்கரையாக மாறியது. பார்க்குமிடமெல்லாம் சனக்கூட்டம்.
பல மீனவர்களுக்கு மாறிமாறி மீன்கள் அகப்பட்டன. பி.நமசிவாயம் என்ற மீனவருக்கு சுமார் 10ஆயிரம் கிலோ பாரைக்குட்டி மீன்கள்; பிடிப்ட்டன.

அண்மைக்காலமாக 1கிலோ மீன் 350ருபாவிற்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று கடலோரத்தில் இலவசம். ஊருக்குளட மீன்விற்பவர்கள் ஒருகிலோ 150வுக்கு விற்றனர்.

வலையிலிருந்து தவறிய மீன்களை எடுத்து ஒரு லட்சருபாவுக்கு விற்ற பொதுமகனும் இருக்கிறார்.
கடற்கரையோரமெல்லாம் மீன்மயம். சிறுவர்களும் கையால் மீன்களை துடிக்கத்துடிக்க மகிழ்சியுடன் பிடித்தனர்.

நீண்டநாட்களுக்குப்பிறகு மீனவர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சி நிலவுகிறது. 








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours