வடகிழக்கில் பெருபான்மையாக இருக்கின்ற தமிழ்கட்சிதான் பிள்ளையானின் விடுதலைக்கு குந்தகம் விளைவித்து, விடுதலைக்கு எதிர்க்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் பிரதியமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார்.
மட்டக்களப்பில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் பிள்ளையானின் விடுதலையை வலியுறுத்தியும்,பிள்ளையான்மீது விசாரணையை மேற்கொண்டு விடுதலை செய்யப்பட வேண்டுமென்று மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை(18) இடம்பெற்றது.இறுதியாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தில் "கிழக்கின் விடுதலை" எனும் தலைப்பில் கூட்டம் இடம்பெற்றது.இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான விமலவீர திசாநாயக்க,துரையப்பா நவரெட்ணராஜா,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டார்கள்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ...இன்று முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு 44ஆவது பிறந்தநாளாகும்.அவருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கிழக்கு மண்ணிற்கு ஆற்றிய சேவைகள் சிறப்பானதாகும்.அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் தமிழ்மக்களை ஒற்றுமையாகவும்,தனித்துவதுடனும் சிறப்பாக வழிநடாத்தி தமிழ்மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுத்தவர்.இவருடை துரும்பையும் தமிழ்கட்சிகள் செய்து காட்டாமல் வீராப்பு பேசி தமிழ்மக்களை ஏமாற்றுகின்றார்கள்.இதனை விளங்கிக்கொண்ட கிழக்குத் தமிழ்மக்கள் பிள்ளையானை தமது ஏகபிரதிநிதியாகவும்,தலைவனாகவும் ஏற்றுக்கொண்டு வாழ்கின்றார்கள்.பிள்ளையானின் தலைமைத்துவத்துடன் செயற்படும் தமிழ்மக்கள் அவ்வாறான தமிழ் பிரதிநிதிகளை தற்போது நிராகரித்து வருகின்றார்கள்.
தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் கையாலாகாத செயற்பாடு போன்றில்லாமல் கிழக்குத்தமிழர்களின் விடுதலைக்காகவும்,மூவின மக்களையும் அரவணைத்து கிழக்கில் நிலையான ஆட்சியை நடாத்தியவர்.எந்த இனத்தின் தலைவராக இருந்தாலும் நாங்கள் மதிக்கின்றோம்.அவரை வடகிழக்கில் உள்ள ஒரேயோரு தமிழ்கட்சி பரிந்துரை செய்து அவரை சிறைக்குள் அடைத்து வைத்துள்ளது.எங்களுடைய மிகவிரைவில் ஆட்சி மலரவிருக்கின்றது.இன்னும் நூறு அல்லது நூற்றிமுப்பது நாட்களுக்குள் பிள்ளையான் விடுதலை செய்யப்படுவார்.அவரின் விடுதலைக்காக ஏங்கும் தமிழ் உறவுகள் விடுதலையின் பின்னர் பிள்ளையானை கிழக்கின் அபிவிருத்திக்காக முழுமையாக பயன்படுத்தும் என்பதில் எதுவித ஐயமில்லை.
இந்த நாட்டிலே சட்டம் வரையறையுடன் செயற்படுகின்றது.அதனை நடைமுறைப்படுத்துவது நீதிமன்றங்கள் ஆகும்.நீதிப்பொறிமுறைகள்,சட்ட சரத்துக்கள் சிறப்பாக செயற்படுவதுதான் நாட்டினுடைய அரசாங்கத்தின் கையில்தான் தங்கியிருக்கின்றது.
வடகிழக்கில் இருக்கின்ற ஒரேயொரு தமிழ்கட்சிதான் பிள்ளையானின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது.சிங்கள மக்கள் பிள்ளையானின் விடுதலைக்கு பிரார்த்திக்கின்றது,பல முயற்ச்சிகளை எடுத்திருக்கின்றது.சிங்கள மக்களோ அல்லது சிங்கள கட்சிகளோ பிள்ளையானின் விடுதலைக்கு எப்போதும் ஆதரவுதான் இருக்கின்றது.கிழக்குத் தமிழ்மக்களுக்கு அந்தக்கட்சி எதுவென்று புலப்படும்.அவர்கள் தமிழ்மக்களை ஏமாற்ற முடியாது.இனியும் பசப்பு வார்த்தைகளை பாவித்து கபட அரசியல் செய்யமுடியாது.
மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் இருக்கின்ற பிள்ளையான் தடுப்புகாவலில் இருக்கின்றான்.எங்களுடைய மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலம் மிகவிரைவில் மலரவிருக்கின்றது.அப்போது பிள்ளையானை சிறைக்குள் அடைத்த அந்த தமிழ்கட்சிகளுக்கு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு நீதியான விசாரணையும், ஒழுக்காற்று விசாரணையும் இடம்பெற்று சட்டம் தன் கடமையைச் செய்யும்.
நாட்டின் எதிர்காலம்,சுபீட்சம்,தமிழ்மக் களின் அடிப்படைப்பிரச்சனையை கருத்திற்கொண்டு எங்களுடைய ஆட்சி தொடரும்.மட்டக்களப்பு, அம்பாறை,திருகோணமலை எங்கும் அநியாயமான முறையில் செயற்படும் அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு தமிழ்மக்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் எனத்தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours