(சதீஸ்)

'நிராயுதம்' என்ற பெயரில் சஞ்சிகையொன்றை வெளியீடு செய்துள்ளதாக அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த எம்.ஐ. ஜாபிர் தெரிவித்தார்.

மும்மொழியிலும் உள்ள இந்த சஞ்சிகையின்  முதலாவது வெளியீடு ஓகஸ்ட் 21ம் நாளன்று (21.08.2019) நாடெங்கிலும் இலவசமாக விநியோகிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டதன் நோக்கம் பற்றி மேலும் குறிப்பிட்ட அவர், சிறந்த மக்கள் சமுதாயமொன்றை உருவாக்குவதே அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் என்று கருதுவதால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும்;, பொதுமக்களின் நலன்சார் சிந்தனைகளுக்கும் குரலற்ற மனிதர்களின் உரையாடலுக்குமாக இந்த சஞ்சிகை களம் அமைத்துக் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மதங்கள், இனங்கள், மொழிகள் என்ற அடிப்படையில் பிளவுபட்டு நிற்காமல் இலங்கையர்கள் அனைவரும் மனிதர்கள் என்ற நன்னோக்கில் செயற்படுவதே சிறந்தது என்பதைக் காலக் கண்ணாடிபோல் புரிய வைப்பது மிக அவசியமானது என்றும் அதற்காக இந்த சஞ்சிகை பாடுபடும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

'நிராயுதம்' சஞ்சிகையின் அடுத்து வரும் 3 இதழ்களும் இலவசமாகவே விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours