(த.தவக்குமார்)
இலங்கையில் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையில் வராற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசாமி ஆலயத்தின் வருடார்ந்த உற்சவம் அதாவது இன்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாகி தலைமையில் கொடியேற்றத்துடன் நடைபெறவுள்ளது.
இருபத்தொரு நாட்கள் நடைபெறவுள்ள உற்சவமானது இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 14.09.2019 அன்று மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.
இன்று கொடியேற்ற தினமான ஆலயத்திற்கு அருகிலுள்ள ஐயனாரடி ஆலத்திற்கு சென்று அங்குள்ள கொக்கட்டி மரத்தில் கொடிக்கம்பை வெட்டி சங்கொலிக்க கோவில் தவில் முழங்க மணி மினுக்கி சிமந்து வந்து அதற்கு அபிஷேகம் செய்து சந்தண மண்டபத்துள் கொடியேற்றப்படும். இது உட்கொடியாகும்.ஆலயத்தை சுற்றி மேலும் ஆறு இடங்களில் திசைக்காவற் கொடிகள் எனப்படும் வெளிக்கொடிகள் ஏற்றப்படும்.








Post A Comment:
0 comments so far,add yours