இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான நியூசிலாந்தின் அணித்தலைவராக சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் டிம் செளதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தொடரிலிருந்து நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், மற்றைய சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குழாமுக்கு விக்கெட் காப்பாளர் டிம் செய்ஃபேர்ட், துடுப்பாட்டவீரர் டொம் ப்ரூஸ், வேகப்பந்துவீச்சாளர் செத் றான்ஸ் ஆகியோர் நியூசிலாந்துக் குழாமுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். நியூசிலாந்து இறுதியாக விளையாடிய இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரான, இந்தியாவுக்கெதிரான தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் இவர்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
இதேவேளை, இந்தியாவுக்கெதிரான நியூசிலாந்துக் குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் டவ் பிறேஸ்வெல், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.

Post A Comment:
0 comments so far,add yours