கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் புதன்கிழமை ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பணிகள் அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை இடம்பெறும்.
இதன் முதற் கட்ட நடவடிக்கைகளுக்காக 12 பாடசாலைகள் முற்றுமுழுதாக மூடப்படுவதுடன், 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படும். எனினும் முற்றாக மூடப்படும் பாடசாலைகள் அடுத்த தவணைக்காக எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக இடம்பெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post A Comment:
0 comments so far,add yours